சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்…

0
6

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சேபாலிகா சமன்குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொடகம ஆகியோரும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள இந்த வழக்கில், 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் 30 சாட்சிகளும் 38 ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

2022 மே 09 போராட்டங்களின்போது சேதமடைந்த மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான செவனகல கிரியிப்பென்பெவ பகுதியில் உள்ள காணி மற்றும் கட்டிடத்துக்கான இழப்பீடு நிராகரிக்கப்பட்டிருந்தபோதும், அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து 8,850,000 ரூபா இழப்பீடு பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here