கொடக்கவெல பிபிலேகம மகா வித்தியாலயத்தில் 4கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு.

0
11

எம்பிலிபிட்டிய கல்வி வலயத்துக்குட்பட்ட கொடக்கவெல பிபிலேகம மகா வித்தியாலயத்தில் 4 கோடியே 80 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கொண்ட புதிய கட்டிடம் இன்றைய தினம் (19.06.2026) பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

அத்தோடு 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினி உபகரணங்களும் பாடசாலைக்கு வழங்கி வழங்கப்பட்டதுடன் பிபிலேகம மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைகழகம் தெரிவான நான்கு மாணவர்களும், கல்வியற் கல்லூரிக்கு தெரிவான ஒரு மாணவனும் பாராட்டி கௌரவிப்பு மற்றும் புலமை பரிசீல்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவ தலைவர்களுக்கான சின்னங்களும் சூட்டப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here