இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் மகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தில் அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இணைந்தார்.
1971ம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பயணிக்கும் மகேந்திரன், பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார். ஒரு அரசியல்வாதியாக மட்டுமில்லாமல், தமிழ் கட்டுரையாளர், பேச்சாளர் என பன்முகங்களை கொண்டவர்.

