தமிழகத்தின் புதிய அத்தியாயம் – பதவியேற்றதும் 3 முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்து

0
43

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், பொறுப்பேற்ற உடனேயே மூன்று முக்கிய திட்ட ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் “சிங்கப் பெண்” சிறப்பு அதிரடிப்படையை அமைப்பதற்கும், 200 அலகுகள் வரை இலவச மின்சாரம் வழங்குவதற்கும், போதைப்பொருள் தடுப்பு சிறப்பு படையை உருவாக்குவதற்குமான ஆவணங்களிலும் அவர் ஒப்பமிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து மக்களிடம் வெளிப்படையாக விளக்கமளித்த பின்னரே தனது ஆட்சிப் பணிகளை முழுமையாக முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பை முன்னுரிமையாகக் கொண்டு, இன்று முதல் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும், தனது ஆட்சிக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த சிறிது கால அவகாசம் வழங்குமாறும் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதியாக நிலைநிறுத்துவதுடன், சிறுபான்மை மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கும் அரசாக தமிழக வெற்றிக் கழகம் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வெற்றிக்கு காரணமான இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here