5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 இல்: பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

0
9

2026ஆம் ஆண்டுக்கான 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 2,723 மையங்களில் இந்தப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.

பரீட்சை நேர அட்டவணை:

பகுதி II: காலை 9:30 – 10:45

பகுதி I:காலை 11:15 – மதியம் 12:15

முக்கிய தகவல்கள் & திருத்தங்கள்:

பரீட்சார்த்திகளின் வருகைப் பதிவேடுகள் அந்தந்த வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

விண்ணப்பப் படிவத்தில் விவரங்களை திருத்த விரும்பும் மாணவர்கள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 3, 2026 வரை இணையவழியில் மேற்கொள்ளலாம்.

இணையதளங்கள்:  www.doenets.lk / onlineexams.gov.lk

தொடர்பு எண்கள் (மேலதிக விவரங்களுக்கு):

தொலைபேசி எண்கள்:011-2784208, 011-2784537, 011-2786616, 011-2785413

துரித இலக்கம் (Hotline): 1911

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here