கொழும்பு செட்டியார் தெரு / பம்பலப்பிட்டி நாட்டுக்கோட்டை நகரத்தார் புதிய கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்தின் 152வது ஆண்டு ஆடி வேல் விழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளி ரத பவனி நாளைய தினம் 28.07.2026 ஆரம்பமாகவுள்ளது.

இதனை முன்னிட்டு எவ்வித குறைகளுமின்றி ஆடிவேல் வெள்ளி ரத பவனி சிறப்பாக இடம்பெற அருள் வேண்டி, இன்றைய தினம் 27.07.2026 திங்கட்கிழமை விசேட கணபதி பூஜை வழிபாடுகள் செட்டியார் தெரு விநாயகர் ஆலயத்தில் பக்தி பூர்வமாக நடைபெற்றன.

இந்த பூஜை வழிபாடுகளில் செட்டியார் தெரு ஆடிவேல் விழாக் குழுவினர், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

“முருகன் அருளால் மனங்களில் பக்தி மலரட்டும்; வேலின் அருளால் வாழ்வில் வெற்றி நிலைத்திடட்டும்.”

இந்த புனிதமான ஆடிவேல் உற்சவத்தில் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு, முருகப்பெருமானின் அருளாசியைப் பெற்று, குடும்ப நலன், ஆன்மிக அமைதி மற்றும் வாழ்வின் வளம் ஆகியவற்றைப் பெற்றுய்யுமாறு ஆலய அறங்காவலர் சபை அன்புடன் அழைக்கின்றார்கள்.


