22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு: 40 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அழுத்தம்!

0
9

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து 40 தொழில்சார் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் யோசனை நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்கும் என இன்று நடைபெற்ற கூட்டுச் சந்திப்பில் எச்சரிக்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA), அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம், அதிபர்கள் சங்கம் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் ஆகிய அமைப்புகள் பங்கேற்றன.

அரசியலமைப்புத் திருத்தத்தைக் கைவிட்டு, உயர் நீதிமன்றங்களில் காலியாகவுள்ள இடங்களை உடனடியாக நிரப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின்பிரதான கோரிக்கை.

அரசாங்கம் இந்தத் திருத்தத்தை முன்னெடுக்க முற்பட்டால், அது சர்வஜன வாக்கெடுப்புமூலம் மக்களிடமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சுயாதீனம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களாட்சியைப் பாதுகாப்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அனைத்து அமைப்புகளும் கூட்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here