ஹொரணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாகத் தங்கச் சங்கிலிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நான்கு சந்தேகநபர்களைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கொள்ளைச் சம்பவங்களை நேரடியாகச் செய்த இரு ஆண்களும், திருடப்பட்ட நகைகளை அடகு வைக்க உதவிய இரு பெண்களும் அடங்குவர்.
25 மற்றும் 23 வயதுடைய இரு ஆண்கள் ஹொரணை, அங்குருவாதொட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
ஹொரணை கடையில் பணிபுரிந்த பெண், வெலிகல பகுதியில் இரு பெண்கள், கொணப்பல பகுதியில் ஒரு பெண் மற்றும் முனகம கடையில் பணிபுரிந்த ஒருவரிடம் தங்கச் சங்கிலிகள் மற்றும் பதக்கங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
ஹொரணை தலைமையகப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

