தெஹியோவிட்ட, ருவன்வெல்லவில் 6 பாடசாலைகளுக்கு பூட்டு

0
11

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகளை இன்றைய தினம் (22) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ருவன்வெல்ல பகுதியில் 3 பாடசாலைகளையும், தெஹியோவிட்ட பகுதியில் 3 பாடசாலைகளையும் மூடி, மாணவர்களை வீடுகளுக்கு அனுப்புமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தற்போதுள்ள காலநிலை நிலவரத்தைக் கருத்திற்கொண்டு, ஏனைய பாடசாலைகளை நடத்துவதா அல்லது விடுமுறை வழங்குவதா என்பது குறித்து தீர்மானிக்கும் பொறுப்பு வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெஹியோவிட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் எச்.எல். ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here