யாழ்ப்பாணம்: செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூடுகள் மீட்பு; இதுவரை 405 அடையாளப்படுத்தல்!

0
7

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் போது, இன்றைய தினமும் மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், 11 புதிய எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 30ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் (21) தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக, சிவில் அமைப்புகள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் முன்னிலையில் இந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

அகழ்வுப் பணிகளின் தற்போதைய நிலை:

 இன்று மீட்கப்பட்டவை:07 மனித எலும்புக்கூடுகள்.

 புதிதாக அடையாளம் காணப்பட்டவை: 11 எலும்புக்கூடுகள்.

 இதுவரை அடையாளப்படுத்தப்பட்ட மொத்த எலும்புக்கூடுகள்: 405

 இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டவை:377

இப்பகுதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் மூலம் மேலும் பல மனித எச்சங்கள் கண்டறியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here