யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அடிக்கல் நாட்டினார்!

0
3

மாகாணத்திற்கான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ், 2026ஆம் ஆண்டிற்கான மாகாண கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்தின் வழியாக யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (03) சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.


அமைச்சரின் உரையின் முக்கிய அம்சங்கள்:
கல்வியே நாட்டின் முதலீடு:80 ஆண்டுகளுக்கும் மேலாக கல்விச் சேவை ஆற்றிவரும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, வட மாகாண கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாட்டை நிலையான முறையில் கட்டியெழுப்புவதற்கு மனித வள மேம்பாடே முக்கிய முதலீடு; அதற்கு கல்வியே அடித்தளமாகும்.
கல்விச் சீர்திருத்தங்கள்: மாணவர்களின் கல்விப் பயணத்தில் உள்ள சவால்கள் மற்றும் அழுத்தங்களைக் குறைத்து, அவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் கல்விச் சீர்திருத்தங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பெற்றோருக்கான எச்சரிக்கை:போதைப்பொருள் வியாபாரிகள் மாணவர்களை இலக்கு வைத்து சமூகத்தைச் சீரழிக்க முயல்வதால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்கள்:
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் நிறைவில், பாடசாலையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அனைவருக்கும் அமைச்சர் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here