முன்னாள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி மற்றும் சாமர சம்பத் எம்.பி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

0
6

முன்னாள் பிரதி சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சந்திம வீரக்கொடி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் இன்று, 2026 அக்டோபர் 12 திங்கட்கிழமை அன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளனர்.

முன்னாள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, தற்போது இடம்பெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

அதேவேளை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here