மாவடிப்பள்ளயில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

0
7
an Indian or Asian person laying dead with outstretched hand during COVID-19 or corona virus outbreak

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காரைதீவு பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வௌியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here