மாறுகிறது உலக வரைபடம்! – ஐ.நா வரலாற்றுத் தீர்மானம்!

0
8

ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான அளவைத் துல்லியமாகக் காட்டும் வகையில், பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ‘மெர்கேட்டர்’ (Mercator) உலக வரைபடத்தை முறைப்படி நீக்குவதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது.

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில், 16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த மெர்கேட்டர் வரைபடத்திற்குப் பதிலாக, 2018-ஆம் ஆண்டின் மிகவும் துல்லியமான ‘ஈக்வல் எர்த்’ வரைபடத்தைப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 164 நாடுகள் வாக்களித்தன.

அமெரிக்கா மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்ததுடன், 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஆப்பிரிக்க யூனியனின் சார்பில் டோகோ நாடு இந்த ‘Correct The Map’ பிரச்சாரத்தை முன்னெடுத்தது. 1569-இல் உருவாக்கப்பட்ட பழைய மெர்கேட்டர் வரைபடத்தால், நிலநடுக்கோட்டுக்கு அருகில் உள்ள ஆப்பிரிக்கா போன்ற பகுதிகள் அதன் உண்மையான அளவை விட மிகச் சிறியதாகக் காட்டப்பட்டன.

உதாரணமாக, கிரீன்லாந்தை விட ஆப்பிரிக்கா 14 மடங்கு பெரியது என்ற போதிலும், பழைய வரைபடத்தில் இரண்டும் ஒரே அளவில் காட்டப்பட்டு வந்தன.

ஐ.நா தீர்மானங்கள் சட்டப்பூர்வமாகக் கட்டாயப்படுத்த முடியாதவை என்றாலும், பள்ளிப் பாடத்திட்டங்கள் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற அன்றாட தொழில்நுட்பங்களில் விரைவில் புதிய வரைபடம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அரைக்கோள நாடுகளின் புவியியல் முக்கியத்துவத்தை உலகளவில் சரியாகப் பிரதிபலிக்க இந்த மாற்றம் பெரிதும் உதவும் என சர்வதேச வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here