பயணக் கொடுப்பனவு உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி, நாடு தழுவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க, தங்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த எட்டு வருடங்களாக எவ்வித மாற்றமுமின்றி வழங்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக 20 லீட்டர் எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த போதிலும், அத்தீர்மானம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பாட்டுள்ள தாமதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே, நாடு தழுவிய ரீதியில் இரண்டு நாட்களுக்கு நோய் விடுப்புப் பதிவு செய்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

