நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட விசாரணை அறிக்கை!

0
2

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைப் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 5-ஆம் திகதி இடம்பெற்ற இந்த மோதலில் 22 கைதிகளும், 10 சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்ததுடன், 21 அதிகாரிகளும் 106 கைதிகளும் காயமடைந்தனர்.

உயிரிழந்த சிறை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அவர்களுக்கான கூடுதல் நலத்திட்டங்கள் மற்றும் நிவாரணங்களை ஆராய ஜனாதிபதியால் தனிக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இக்குழுவானது மரணமடைந்த அதிகாரிகளின் இழப்பீடு, ஓய்வூதிய உரிமைகள் மற்றும் அவர்களின் நிலுவைக் கடன்கள் குறித்து பரிந்துரைகளை வழங்கும்.

அத்துடன், நிரந்தர ஊனமுற்றோர் உட்பட காயமடைந்த அதிகாரிகளின் நிலைமையை மதிப்பீடு செய்து உரிய ஆதரவு நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here