நாமலை கைது செய்தது Gen Zக்கு சந்தோஷம்! – விஜித ஹேரத் பதிலடி!

0
6

ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை இலங்கையின் இளைய தலைமுறையினர் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கைது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கை குறித்து, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

நாமலின் கைது போன்ற நடவடிக்கைகளை Gen Z தலைமுறையினர் கடுமையாக எதிர்ப்பதாக UNP கூறியிருந்ததை அமைச்சர் விஜித ஹேரத் முற்றிலும் நிராகரித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர், ‘நாட்டை நாசமாக்கிய திருடர்களையும் ஊழல்வாதிகளையும் வெளியேற்ற வேண்டும் என்றே ஜென் ஜி தலைமுறையினர் ‘அரகலய’ போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படும்போது தான் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள். நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்ட தாமதமே அவர்களை விரக்தியடையச் செய்தது. எனவே, இன்று நமது இளைய தலைமுறையினர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்’ எனக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here