ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய கட்டுப்பாடுகளால் H-1B விசா விண்ணப்பங்களில் பெரிய சரிவு

0
13

பணி விசா தெரிவு முறையில் பெரிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு H-1B விசாக்களுக்கான விண்ணப்பங்கள் கணிசமாக குறைந்துள்ளதாக டொனால்டு டிரம்ப் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த முறையை தவறாக பயன்படுத்துவதற்கு எதிரான ஒரு கடுமையான நடவடிக்கை என்று இதைக் குறிப்பிட்ட அந்த நிர்வாகம், “குறைந்த ஊதியத்தில் பெருமளவிலான பதிவுகள் மூலம் இந்தத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் நாட்கள் முடிந்துவிட்டன” என்றும் கூறியது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் வெளியிட்ட தரவுகளின்படி, முறையாக சமர்ப்பிக்கப்பட்ட H-1B பதிவுகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 38.5 சதவீதம் குறைந்துள்ளன. அதாவது, 2026 நிதியாண்டில் 343,981 ஆக இருந்த பதிவுகளின் எண்ணிக்கை, 2027 நிதியாண்டில் 211,600 ஆக குறைந்துள்ளது.

அமெரிக்காவில் வேலை தேடும் இந்திய தொழில் வல்லுநர்களால் பரவலாக பயன்படுத்தப்படும் H-1B விசா திட்டம், சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் பரவலான முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கம் என்று கூறி, வெள்ளை மாளிகை முன்னதாக கடுமையான ஊதியத் தேவைகளை அறிமுகப்படுத்தி, விண்ணப்ப கட்டணங்களையும் உயர்த்தி இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here