ஜூன் 10 முதல் புதிய வாகன இலக்கத் தகடுகள்

0
37

நாட்டில் நீண்டகாலமாக தாமதமடைந்திருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் விளக்கமளிக்கையில், வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்காக புதிய நிறுவனம் ஒன்றுக்கு விலைமனு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி குறித்த நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒப்பந்த நிபந்தனைகளின் அடிப்படையில், கையெழுத்திடப்பட்ட தினத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் அச்சிடும் பணிகளை ஆரம்பிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, ஜூன் 10ஆம் திகதிக்குள் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க அந்த நிறுவனம் தயாராக இருப்பதாக பிரதி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here