சீனாவில் இருந்து இலங்கை வந்தடைந்தன 104 புதிய ‘மெட்ரோ’ பேருந்துகள்!

0
6

இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் திறமையாகவும் உயர் தரத்துடனும் மாற்றும் நோக்கில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 104 புதிய ‘மெட்ரோ’ (Metro) பேருந்துகளின் முதற்கட்டம் நேற்று (29) நாட்டை வந்தடைந்துள்ளது.

சீனாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ‘போட்டோன் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன்’ (Foton International Corporation) நிறுவனத்திடமிருந்தே இந்தப் பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையின் தரத்தை உயர்த்தும் நோக்கில், இந்தப் புதிய மெட்ரோ பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் கடந்த மே மாதம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தற்போது முதற்கட்டமாக 104 மெட்ரோ பேருந்துகள் தீவை வந்தடைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here