கலாநிதி வி. ஜனகன் அவர்களின் எண்ணக்கருவில் உருவான “கல்விக்கு கரம் கொடுப்போம் – 2026” திட்டத்தின் கீழ், IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் அனுசரணையில் கொழும்பு மகாவத்த,புனித அந்தோனியார் தமிழ் மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கான பிளேசர் கோட்களைப் பெற்றுக்கொள்வதற்காக ரூ.3 இலட்சம் பெறுமதியான காசோலை வழங்கப்பட்டது.

IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி. ஜனகன் அவர்களின் சார்பில், அவரது பிரதிநிதி திரு. றிஸ்கான் முகம்மட் அவர்கள் அண்மையில் புனித அந்தோனியார் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபரிடம் குறித்த காசோலையை கையளித்தார்.

இந்நிகழ்வில் ஜனனம் அறக்கட்டளையின் வட கொழும்பு சேர்ந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட இத்தகைய சமூகப் பொறுப்புணர்வுள்ள செயற்பாடுகள் பல மாணவர்களின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக அமையும் எனப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.


