முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) மற்றும் ‘ஜன அரகலய வியாபாரய’ இணைந்து கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் மற்றும் அனுமதிப்பத்திரமின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொரளை கேம்பல் பூங்காவிற்கு அருகில் ஆரம்பமான பேரணி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி நகர்ந்தது.
ஆர்ப்பாட்டப் பேரணியினால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்தைச் சீரமைக்கக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

