கிரீஷ் பணப்பரிவர்த்தனை வழக்கு: நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு

0
5

கிரீஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தன ஆகியோரை வரும் 16ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துக்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகமை இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அத்துடன், சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு அன்றைய தினம் (16ஆம் திகதி) அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here