காலி அணிக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

0
6

லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது.

கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் குறித்த போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் மற்றும் காலி கெலன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஜஃப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜஃப்னா கிங்ஸ் அணியின் சார்பில் கமில் மிஷார அதிகபட்சமாக 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் காலி அணியின் சார்பில் சரித் அசலங்க மற்றும் ஈஷான் மலிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்தநிலையில் காலி அணிக்கு 124 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here