கபில சந்திரசேனவின் மர்ம மரணம் – 24 மணிநேரத்தில் மஹிந்தவுக்கு அழைப்பு

0
38

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்–ஏர்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதம் இன்று (09) கால்டன் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஆணைக்குழு அழைத்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தபோதிலும், அப்போது எந்த உத்தியோகபூர்வ அழைப்பும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணத்துக்கு 24 மணி நேரத்திற்குள் இந்த அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டமை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தன்னை அச்சுறுத்தியதாகவும், தனது வாக்குமூலம் அழுத்தத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகவும் கபில சந்திரசேன முன்னதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here