உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் – ஹேமசிறிக்கும் மரணதண்டனை

0
6

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்துள்ளது.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக இரகசிய தகவல்கள் கிடைத்தும் அதை தடுக்க தவறியமை மேலும் தாக்குதலுக்கு மறைமுகமாக உதவி ஒத்தாசை புரிந்தமைக்காக 857 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு முன்னாள் பாதுகாப்புச் செயலருக்கு நிரந்தர மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்ததுள்ளது.

முன்னதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்துக்கும் இன்று மரணதண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here