ஈரானுக்கு ஆதரவாகக் களம் இறங்கும் ஹிஸ்புல்லா, ஹவுதி படைகள் – இஸ்ரேலுக்குப் புதிய ஆபத்து

0
22

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் போராமான மாறியது. வளைகுடா (மத்திய கிழக்கு) நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அத்துடன் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது.

கடந்த பெப்ரவரி மாதம் 2ம் திகதி தொடங்கிய இந்த போர் சுமார் 40 நாட்களுக்கு மேலாக நீடித்தது. பின்னர் பாகிஸ்தான் மத்தியஸ்தராக திகழ, அமெரிக்கா- ஈரான் இடையில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. பின்னர் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டன. ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்க மறுக்கிறது. அதேவேளையில் அமெரிக்காவின் சில உத்தரவாதத்தை நம்ப ஈரான் மறுத்து வருகிறது.

இதனால் ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிகிறது. டிரம்ப் இது தொடர்பாக தொடர்ந்து மிரட்டி வருகிறார்.

இந்தநிலையில் ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC), எங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் போர் மத்திய கிழக்கு நாடுகளை தாண்டி விரிவடையும் என எச்சரித்துள்ளது. அமெரிக்கா- ஈரான் இடையில் போர் மூண்டால் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம். ஹவுதி குரூப்பும் ஈரானுக்கு ஆதரவு செயல்பட வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here