அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த பங்களாதேஷ்! – பயிற்றுவிப்பாளர் ஃபில் சிம்மன்ஸ் எச்சரிக்கை!

0
2

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி, அந்த வெற்றியின் மிதப்பில் இருந்து விலகி அடுத்த போட்டிக்குத் தயாராக வேண்டும் என அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஃபில் சிம்மன்ஸ் எச்சரித்துள்ளார்.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் தீர்மானமிக்க இரண்டாவது போட்டி ஓகஸ்ட் 22 ஆம் திகதி மெக்கே (Mackay) நகரில் நடைபெறவுள்ளது.

அத்துடன் “வெற்றியைக் கண்டு நாம் மிதந்துவிடக் கூடாது. அடுத்த போட்டியில் அவுஸ்திரேலியா இன்னும் பலமான பதிலடியைக் கொடுக்கும். எனவே நமது ஆட்டத்திறனை மேலும் 1 சதவீதமாவது உயர்த்த வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் பெற்ற தொடர் வெற்றிக்குப் பிறகு, தற்போது அவுஸ்திரேலிய மண்ணிலும் வெற்றி பெற்றதன் மூலம் பங்களாதேஷ் அணி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக மரியாதையைப் பெற்று வருவதாக ஃபில் சிம்மன்ஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here