அம்பத்தலை – கடுவலை பிரதான குழாயில் வெடிப்பு : நீர் விநியோக சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

0
17

கொழும்பின் பல பகுதிகளில் தற்காலிக நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அம்பத்தலையிலிருந்து கடுவலை நோக்கி நீரை வழங்கும் பிரதான விநியோகக் குழாயில் திடீர் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (09) இரவு 7.30 மணி முதல் நாளை (10) பிற்பகல் 1.00 மணி வரை பல பகுதிகளில் நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

கடுவலை, கொத்தலாவல, வெலிவிட்ட, ஹேவாகம, கொரதொட்ட, பொமீரிய, நவகமுவ, ரணால மற்றும் கஹந்தோட்ட ஆகிய பகுதிகளில் இந்த நீர்விநியோகத் தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் குழாய் செயலிழப்பினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்கள் தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here