அமெரிக்காவிடம் இழப்பீடு கேட்கும் ஈரான் – ஒப்பந்த மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிரடி நிபந்தனை!

0
3

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மீறல்கள் வழக்கமான ஒன்றாக மாறுவதைத் தடுக்க ஈரான் விரும்புகிறது என மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வு மையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் அப்பாஸ் அஸ்லானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் புரிந்துணர்வு ஒப்பந்த மீறல்களுக்கு இழப்பீடு வழங்குமாறு தெஹ்ரான் கோரி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஒப்பந்த மீறல்கள் இயல்பான நடைமுறையாக மாறுவதைத் தடுப்பதற்கும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடப்பதைத் தவிர்ப்பதற்குமே ஈரான் இந்த நிபந்தனையை விதித்துள்ளது.

பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துதல் அல்லது முடக்கப்பட்ட சொத்துக்களை அணுக அனுமதித்தல் போன்ற வடிவங்களில் இந்த இழப்பீடு அமையலாம் என அஸ்லானி அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.

முந்தைய சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இவை தீர்க்கப்படாத முக்கிய விடயங்களாக இருந்தன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போது கிடைக்கப்பெறும் ஒரே நடைமுறை அமைப்பாக இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மட்டுமே ஈரான் கருதுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here