ஹம்பந்தொட்டை போதனா வைத்தியசாலைக்கு அருகில் யானை தாக்குதல்: ஒருவர் படுகாயம்

0
7

ஹம்பந்தொட்டை போதனா வைத்தியசாலைக்கு அருகில் நேற்றைய தினம் (03) மாலை இடம்பெற்ற காட்டுயானை தாக்குதலில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஹம்பந்தொட்டை போதனா வைத்தியசாலையின் உணவக (Canteen) ஊழியர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அவர் மற்றொரு நபருடன் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பகுதிக்குச் சென்றிருந்தபோதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதன்போது, அவருடன் இருந்த மற்றைய நபர் அதிர்ஷ்டவசமாக ஓடித் தப்பியுள்ளார்.

காயமடைந்த நபர் உடனடியாக ஹம்பந்தொட்டை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பந்தொட்டை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here