விலுத்து வலயத்தில் 110 மரங்கள் அழிப்பு: நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

0
10

விலுத்து தேசிய பூங்காவின் இடைக்காட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள பரண எளுவங்குளம் – நெலும்வெவ பகுதியில், பல நூற்றாண்டு பழமையான மரங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாவர மற்றும் விலங்கினப் பாதுகாப்புச் சட்டக் கோவையின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டுப் பரிசோதனையில், இப்பகுதியில் மொத்தம் 110 மரங்கள் எரிக்கப்பட்டு வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக ஏற்பட்ட ‘சித்வா’ சூறாவளிப் பேரிடரினால் சேதமடைந்த நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள குளத்தின் கரையைப் பலப்படுத்தும் திருத்தப் பணிகளின் போதே இந்த நாசவேலை இடம்பெற்றுள்ளது.

இந்த நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்திற்காக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திடமோ அல்லது மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையிடமோ முறையான முன் அனுமதியோ சுற்றுச்சூழல் பரிந்துரையோ பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here