வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

0
8

கொத்தட்டுவை, மாதின்னாகொட ஸ்ரீ சுரம்யராம புராண விகாரையின் எசல மகா பெரஹெரா ஊர்வலம் இன்று மாலை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அப்பகுதிகளில் தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்!

இன்று மாலை 6:30 மணியளவில் தொடங்கவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெரஹெரா ஊர்வலம் செல்லும் பாதைகளில் இந்த வாகனப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

மாதின்னாகொட ஸ்ரீ சுரம்யராம விகாரையில் இருந்து ஆரம்பமாகும் இந்த ஊர்வலம், மஹானியர சந்திப்பு, 175 பேருந்து பாதை, புத்கமுவ வீதி, அம்பகஹ சந்திப்பு மற்றும் கொடுவேகொட வழியாக ராஜகிரியவை சென்றடையும்.

தொடர்ந்து ராஜகிரியவில் இருந்துமாதின்னாகொட மற்றும் எம்.டி.எச். ஜெயவர்தன மாவத்தை வழியாக மீண்டும் விகாரையை சென்றடையவுள்ளது.

எனவே, இந்த நேரத்தில் குறிப்பிட்ட பாதைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here