வட மாகாண சுகாதார சேவைக்கு புதிதாக 350 சுகாதார உதவியாளர்கள்

0
8

வட மாகாண சுகாதார சேவைக்கு 350 புதிய சுகாதார உதவியாளர்கள் நாளை (18) நியமிக்கப்பட உள்ளனர்.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்திய நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோர் தலைமையில் இந்தநிகழ்வானது யாழ்ப்பாணத்தில் நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது.

வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண தாதியர் கல்லூரி உள்ளிட்ட, மத்திய சுகாதார அமைச்சின் கீழும் வட மாகாண சபையின் கீழும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்காக 350 புதிய சுகாதார உதவியாளர்களின் நியமனம் வழங்கப்படவுள்ளது.

இந்நாட்டின் இலவச சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்தவும், வினைத்திறனான வைத்தியசாலை சேவையை முன்னெடுக்கவும் அரசாங்கம், மாகாண சபைகளுடன் இணைந்து திட்டமிட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here