மலேசிய உணவுத் திருவிழா: வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்பு

0
9

இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் ஆதம் (Badli Hisham Adam) விடுத்த விசேட அழைப்பினை ஏற்று, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் “மலேசிய உணவுத் திருவிழாவில்” (Malaysian Food Festival) கலந்துகொண்டார்.

கொழும்பிலுள்ள மலேசிய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு, நேற்றைய தினம் (2026 ஜூலை 5) மாலை கோலாகலமாக நடைபெற்றது.

கொழும்பு ஷெரட்டன் (Sheraton Colombo) ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழா, மலேசியாவின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரிய உணவுப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்ததுடன், மலேசியாவிலிருந்து வருகை தந்த அனுபவம் வாய்ந்த முதன்மைச் சமையல் கலைஞர்களால் அங்கு பிரத்யேக உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தன.

இலங்கையர்கள் மத்தியில் மலேசிய சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த உணவுத் திருவிழாவானது, கொழும்பிலுள்ள இரு முன்னணி ஹோட்டல்களுடன் இணைந்து மலேசிய உணவுகளை இலங்கையர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் மலேசிய உயர்ஸ்தானிகராலயம் பல நாட்களாக முன்னெடுத்த விசேட திட்டத்தின் இறுதி நாளாக நேற்றைய தினம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here