மக்களின் பார்வைத் திறனை மேம்படுத்தும் உன்னத சேவை: கொட்டாஞ்சேனையில் இன்றைய தினம் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கிய லயன்ஸ் கழகத்தினர்

0
7

கொட்டாஞ்சேனை, தீபத்துத்தாராம ரஜ மகா விகாரையில், 306/D5 லயன்ஸ் கழகத்தின் (Lions Club) ஏற்பாட்டில் அர்ப்பணிப்புடன் கூடிய சமூகப் பணி நிகழ்வாக இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் இன்றைய தினம் (12/07/2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 

மாநகர சபை உறுப்பினர் சாமர அவர்களின் பிரத்யேக வேண்டுகோளுக்கு இணங்க, இப்பகுதி மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த மனிதாபிமான உதவித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ். ஆனந்தகுமார், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மனோகரன், மாநகர சபை உறுப்பினர் தனோஷனி ஆகியோருடன் தேசிய மக்கள் சக்தியின் (NPP) முக்கிய உறுப்பினர்கள் மற்றும் வடக்கு கொழும்பு தேர்தல் குழுவின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அரசியல் பேதங்களைக் கடந்து, மக்களின் அத்தியாவசியத் தேவையை நிறைவு செய்யும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வுக்கு, எஸ். ஆனந்தகுமார் அவர்களின் பிராந்தியக் குழுவினரும், அப்பகுதிப் பொதுமக்களும் தங்களின் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தனர்.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த சமூக நலத்திட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பங்களிப்பு செய்த மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here