பொலிஸ் சான்றிதழ் இணையத்தள சேவை மீண்டும் வழமைக்கு!

0
3

இலங்கை பொலிஸாரின் ‘பொலிஸ் சான்றிதழ்’ (Police Clearance) தரவுத் தொகுதி அமைப்பு மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, பொதுமக்கள் அனைவரும் வழக்கமான இணையத்தள அமைப்பின் வழியிலேயே தங்களுக்கான சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த சேவை தடைப்பட்டிருந்த காலத்தில், விண்ணப்பதாரர்கள் clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்க தற்காலிக அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனவே, அந்தத் தற்காலிக மின்னஞ்சல் முறைமையைப் பயன்படுத்தி விண்ணப்பித்த அனைவரும், தற்போது இணையத்தள சேவை சீராகியுள்ளதால் மீண்டும் ஆன்லைன் அமைப்பினூடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, உரிய கட்டணங்களைச் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here