பேராயர் மீனவ சமூகத்திடம் முன்வைத்த முக்கிய கோரிக்கை

0
7

பாரிய சமூகப் பேரழிவுக்குக் காரணமாக அமைந்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மீனவ சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சில போதைப்பொருள் கடத்தல்களுக்கு மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுவதால், அத்தகைய செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்குமாறு மீனவ சமூகத்திடம் கோரிக்கை விடுப்பதாக வலியுறுத்தினார்.

இன்று (06) பேருவளை பண்டாரவத்தையிலுள்ள புனித லாசர் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பேராயர் இதனைக் குறிப்பிட்டார்.

சிலரின் குறுகிய நோக்கம் கொண்ட இந்த செயற்பாடுகள் பாரிய சமூக சீரழிவு ஏற்படுவதாக தெரிவித்தார்.

அதேநேரம் பெரும்பாலான இளம் தலைமுறையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகி தமது வாழ்க்கையை இழக்கின்றனர்.

எனவே போதைப்பொருளை ஒழிப்பதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும்.

அதற்கு மீனவ சமூகமும் தமது ஆதரவை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here