பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமானால் பெற்றோர்களின் ஜீவனோபாயத்தை பலப்படுத்த வேண்டும் : சஜித்

0
4

பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமானால் பெற்றோர்களின் ஜீவனோபாயத்தை பலப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் பிள்ளைகளின் நலனுக்காக எடுத்துள்ள தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சியும் அனுமதியையும் ஆதரவையும் நல்குகின்றது. நமது நாட்டின் சிறார்கள் சந்ததிக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உரிய போசாக்கு கிடைத்தால் மாத்திரமே அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமும் அரசாங்கமும் அங்கீகரித்த பல புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கொள்கைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இருந்தபோதிலும், இதன் மூலம் சிறார்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு பதிலாக, சிறுவர்கள், தாய்மார்கள் மற்றும் குடும்பத்தின் போசாக்கின்மைதான் அதிகரிக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிள்ளைகளினது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமானால் பெற்றோர்களின் ஜீவனோபாயத்தைப் பலப்படுத்த வேண்டும். இதன் பொருட்டு அரசாங்கம் தலையிட்டு மக்கள் முகங்கொடுக்கும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு விரைந்த தீர்வுகளைப் பெற்றுக் கொடுங்கள் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here