நாட்டில் தீவிரமடையும் டெங்கு பரவல்: கடந்த 24 மணித்தியாலங்களில் 1,069 பேருக்கு தொற்று!

0
8

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரித்துள்ளது.

​கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 1,069 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

அதிப்படியாக உயரும் பாதிப்புகள்

​நடப்பாண்டு மொத்த நோயாளர்கள்: 45,037 பேர்

பதிவாகியுள்ள மரணங்கள்: 28 மரணங்கள்

கவலைக்கிடமான நிலைமை

​சாதாரணமாக நாளொன்றுக்கு 150 முதல் 200 வரையான டெங்கு நோயாளர்கள் மட்டுமே பதிவாவது வழமையாகும். எனினும், அண்மைய நாட்களில் இந்த எண்ணிக்கை 600 முதல் 650 வரை அதிகரித்திருந்தது.

​இந்நிலையிலேயே, தற்போது நாளாந்த டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை வரலாற்றில் முதல் தடவையாக 1,000 ஐ கடந்துள்ளதாக வைத்தியர் கபில கன்னங்கர சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமை மிகவும் கவலைக்கிடமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத்துறையின் அவசர அழைப்பு

​டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நிலைமையை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான சுகாதார மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாகத் தீவிரப்படுத்தப்பட வேண்டுமென வைத்தியர் கபில கன்னங்கர வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களும் தங்கள் சூழலை தூய்மையாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here