ட்ரம்பின் முயற்சிக்கு உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி : அஞ்சல் வழி வாக்குப்பதிவு கட்டுப்பாட்டுக்குத் தடை!”

0
7

எதிர்வரும், அமெரிக்க இடைத்தேர்தலுக்கு முன்னதாக, அஞ்சல் வழி வாக்குப்பதிவு முறையை கட்டுப்படுத்த டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிக்கு அமெரிக்க உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ட்ரம்ப் அரசின் இந்த உத்தரவை இடைநிறுத்திய கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவின்படி, அமெரிக்க அஞ்சல் துறை அஞ்சல் வழியில் வாக்களிக்கும் முறையைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தது.

இதன் கீழ், மாநில அரசுகள் தகுதிவாய்ந்த வாக்காளர்களின் பட்டியலை அஞ்சல் துறைக்கு முன்னரே சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்குச் சீட்டு உறைகளில் சிறப்பு பார்கோடுகள் இருக்க வேண்டும்.

இந்த விதிகளைப் பின்பற்றாத மாநிலங்களின் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க அஞ்சல் துறை மறுக்க முடியும் என தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக 23 மாநிலங்களும், பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் வழக்குத் தொடர்ந்தன.

வழக்கு விசாரணையின் முடிவில் 7-2 என்ற நீதிபதிகள் பெரும்பான்மையில் உச்சநீதிமன்றம் இந்தத் தடையை உறுதி செய்தது.

“டிரம்ப் நிர்வாகம் முன்வைக்கும் வாதங்கள் சட்டப்பூர்வமாக வெற்றிபெற வாய்ப்பில்லை” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here