டெஸ்ட் கிரிக்கெட்டில் சமமான வாய்ப்பு வேண்டும்: சங்கக்கார கோரிக்கை!

0
7

டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் வகையில், சர்வதேச கிரிக்கெட் நாட்காட்டி (FTP) மிகவும் நியாயமான முறையில் அமைக்கப்பட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார வலியுறுத்தியுள்ளார்.

உலக கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகள் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்த சவால்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைத் தவிர்த்து பிற நாடுகளுக்குக் குறைந்த அளவிலான டெஸ்ட் போட்டிகளே கிடைக்கின்றன.

சில நாடுகள் ஒரு போட்டிக் தொடர்களிலேயே விளையாடும் நிலை உள்ளது.

முன்னணி நாடுகளைத் தவிர பிற நாடுகளுக்கு டெஸ்ட் போட்டிகள் மூலம் கிடைக்கும் வருமானம் மிகக் குறைவாக உள்ளது.

ஆப்கானிஸ்தான், அயர்லாந்து போன்ற நாடுகளுக்கு இது பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது.

குறைந்த போட்டிகளில் மட்டுமே விளையாடும் டெஸ்ட் வீரர்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களைப் போலவே, டெஸ்ட் வீரர்களையும் கொண்டாடும் வகையில் முறையான சந்தைப்படுத்தல் இருக்க வேண்டும்.

எதிர்கால சுற்றுப்பயணத் திட்டங்களில் (FTP) இலங்கைக்கு அதிக டெஸ்ட் போட்டிகள் கிடைக்கப் பெறக்கூடிய வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் (ICC) நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பலமாக இருக்கும் அணிகளாலேயே ஒருநாள் மற்றும் T20 போட்டிகளிலும் சிறந்து விளங்கள முடியும் என சங்கக்கார மேலும் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here