டீசல் விலை குறைந்தாலும் 6 மாதங்களுக்கு பஸ் கட்டணம் குறையாது: கெமுனு விஜேரத்ன அதிரடி!

0
5

கொழும்பு:டீசல் விலை குறைக்கப்பட்டாலும் கூட, அடுத்த 6 மாதங்களுக்கு பஸ் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:
கட்டண திருத்த ஆலோசனைகள்: வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தை எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாத இறுதியில் வெளியாகும் எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையிலேயே இது தீர்மானிக்கப்படும்.
6 மாதங்களுக்கு மாற்றமில்லை: ஜூலை மாத திருத்தத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ டீசல் விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த 6 மாதங்களுக்கு பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது.
பஸ் சங்கத்திற்கு நட்டம்: ஜூன் 1ஆம் திகதி முதல் இதுவரை தனியார் பஸ் போக்குவரத்துத் துறைக்கு நாளொன்றுக்கு 25 ரூபாய் வீதம், மொத்தம் 60 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தில் சட்டமில்லை: டீசல் விலை குறைந்தால் பஸ் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடனான ஒப்பந்தத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இதுவரை புரிந்துணர்வின் அடிப்படையிலேயே அது செய்யப்பட்டது. இனி அவ்வாறு செய்ய முடியாது, தேவையெனில் எம்மீது வழக்கு தொடரலாம் என சவால் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here