கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் ‘அறிவோர் ஒன்றுகூடல் 955’ ஆகஸ்ட் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது

0
7

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் ‘அறிவோர் ஒன்றுகூடல் 955’ நிகழ்வு வரும் 2026 ஆகஸ்ட் 12ஆம் திகதி புதன்கிழமை, மாலை 5.30 மணிக்கு சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

திரு. வீரகத்தி தனபாலசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், திரு. கந்தையா சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய “அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும்” எனும் அறிமுக நூலை முன்வைத்து சிறப்புரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் வீரகேசரி நாளிதழின் செய்தி ஆசிரியர் திரு. ஆர். ராம் அவர்கள் கலந்து கொண்டு நூலை அறிமுகம் செய்து முதன்மை உரையாற்றவுள்ளார்.

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெறும் இந்நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here