பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் “அவளின் சந்தை” நிகழ்வு, கொழும்பு 13, மேஃபீல்ட் லேன் நீச்சல் தடாகக் கட்டிடத்தில் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

கொழும்பு மாநகர சபை கொட்டாஞ்சேனை கிழக்கு வட்டார உறுப்பினரும், சமூக சக்தியின் தலைவியுமான காயத்ரி விக்கிரமசிங்க அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வை ஷீ லீட்ஸ் மகளிர் குழு மற்றும் (பிரஜா) சமூக சக்தி இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் திரு. சிவானந்த ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன், கொட்டாஞ்சேனை கிழக்கு சமூக சக்தி செயலாளர் செல்வி கல்யாணி கந்தையா அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

பெண் தொழில்முனைவோரின் உற்பத்திப் பொருட்களுக்கு பொதுமக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர்.

“அவளின் சந்தை” நிகழ்வை எதிர்காலத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


