கொட்டாஞ்சேனியில் 6 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0
8

கொட்டாஞ்சேனை பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, பெருந்தொகையான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

​கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 3.94 கிலோ கிராம் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணமும் பறிமுதல்

​இதேவேளை, குறித்த சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 6 இலட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

​இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here