வரலாற்று சிறப்புமிக்க புனித கதிர்காம கந்தப் பெருமான் ஆலய 2026 ஆம் ஆண்டிற்கான ஆடிவேல் திருவிழா ஜூன் மாதம் முதலாம் திகதி திங்கட்கிழமை கன்னிகால் / முகூர்த்தக்கால் ஊன்றலுடன் ஆரம்பமாகின.

உற்சவகால முக்கிய நிகழ்வுகளாக ஜூலை மாதம் 15 ஆம் திகதி புதன்கிழமை முதலாம் நாள் திருவிழா, ஜூலை 20 திங்கட்கிழமை கொத்துப்பந்தலிடல், அன்னக்கொடியேற்றம், ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை தீமிதிப்பு, ஜூலை 29 புதன்கிழமை அம்மன் தரிசனம் மற்றும் இறுதி நாள் திருவிழா. ஜூலை 30 வியாழக்கிழமை தீர்த்தோற்சவம் நடைபெறும்.
உற்சவ காலங்களில் பெரஹர (வீதியுலா) செல்லும் வீதிகள்
15 ஜூலை கதிர்காம கந்தன் ஆலயம்-பிரதான வீதி ஊடாக வள்ளியம்மன் ஆலயம் – மீண்டும் பிரதான வீதி ஊடாக கதிர்காம கந்தன் ஆலயம்,
16 ஜூலை முதல் 28 ஜூலை வரை கதிர்காம கந்தன் ஆலயம், தெய்வானை அம்மன் ஆலய முன் வீதி ஊடாக வள்ளியம்மன் ஆலயம் பிரதான வீதி ஊடாக கதிர்காம கந்தன் ஆலயம், ஜூலை 29 கதிர்காம கந்தன் ஆலயம் கிரிவேஹர செல்லும் வீதி ஊடாக கிரிவேஹர மீண்டும் கிரிவேஹர செல்லும் வீதி ஊடாக கதிர்காம கந்தன் ஆலய முன்றல்- தெய்வானை அம்மன் ஆலய உள்வீதிதி ஊடாக வள்ளியம்மன் ஆலயம் – பிரதான வீதி ஊடாக கதிர்காம கந்தன் ஆலயம்.

திருவிழா காலங்களில் ஸ்ரீ தெய்வானை அம்மன் அன்னதான குழுவால் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படும். ஸ்ரீ தெய்வானை அம்மன் தேவஸ்தான அன்னதான புண்ணிய கைங்கரியத்தில் பங்கு கொள்ள விரும்பும் அடியவர்கள் தங்கள் பங்களிப்புகளை பணமாகவோ பொருளாகவோ நன்கொடை வழங்க முடியும். 0777702129 என்ற இலக்கத்தில் அம்மண்டபத்தின் முகாமையாளர் எம்.பி செல்வராஜ் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
பக்த அடியார்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார், ஸ்ரீ கந்த பெருமாள், ஸ்ரீ தெய்வானை அம்மன் மற்றும் ஸ்ரீ வள்ளியம்மன் ஆகியோர் அவர்களது நல்லாசிகளையும் கிருபாகடாட்சங்களையும் , அருளையும் ,நல்ல தேக ஆரோக்கியம், சக்தி, சாந்தி ,சமாதானம், சந்தோசம் மற்றும் மனநிம்மதி ஆகிவற்றையும் அருள்வார்களாக.
எச்.எச். விக்ரமசிங்க



