பேருந்துப் பயணக் கட்டணங்களை கார்ட் (Card) மூலம் செலுத்தும் முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய நடவடிக்கைகள் மூலம் பேருந்து சேவையின் தரத்தை உயர்த்தவும், பயணிகளுக்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்தவும், தனியார் துறையுடன் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப்போக்குவரத்துச் சேவையை நவீனமயப்படுத்தி பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவே இத்தகைய நவீன கட்டண முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகப் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

