இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக “கப்ருக வருணயி, ரட்டம சவியயி” பயிர்ச்செய்கைப் புரட்சி ஆரம்பம்

0
10

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் தென்னை, பலா, ஈரப்பலா மற்றும் பல்வேறு பழக்கன்றுகளை நடும் தேசியத் திட்டத்தின் தொடக்கமாக “கப்ருக வருணயி, ரட்டம சவியயி” (Kapruka Varunai, Ratatama Saviyai) எனும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பயிர்ச்செய்கைப் புரட்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனமடுவ, லபுகல ராஜமகா விகாரை வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு, இளம் தொழிலதிபர் சேனக அபேசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய சேனக அபேசிங்க, அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டிற்கு ஆற்றக்கூடிய சேவைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்:
“அரசியல் பேதங்களின்றி நாடு முழுவதும் பலா, தென்னை மற்றும் ஈரப்பலா கன்றுகளை நடும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். அத்துடன், அழியும் அபாயத்திலுள்ள பல்வேறு வகையான பழ மரக்கன்றுகளையும் மண்ணுக்குக் கொடையாக வழங்க இத்திட்டம் ஆயத்தமாகியுள்ளது.
யார் அரசியல் செய்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் உணவுச் இறையாண்மையையும் (Food Sovereignty) பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்,” எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஆசீர்வதித்து உரையாற்றிய லபுகல ராஜமகா விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய சாரானந்த நாயக்க தேரர், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பயிர்ச்செய்கைப் புரட்சியை வெற்றிபெறச் செய்வதற்குத் தமது முழுமையான பங்களிப்பையும் ஆதரவையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here