இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: அதிரடி மாற்றங்களுடன் இலங்கை குழாம் அறிவிப்பு!

0
4

கொழும்பு SSC மைதானத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான 14 பேர்கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த போட்டியில் விளையாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷ்க அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அதேவேளை, கமில் மிஷார மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் புதிதாகக் குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த போட்டியில் தனஞ்சய டி சில்வா இலங்கை அணியின் தலைவராகவும், கமிந்து மெண்டிஸ் உப தலைவராகவும் தொடர்ந்து செயற்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here